வெளிநாட்டில் வேலை செய்யும் கணவன்... மூன்று முறை தலாக்! அதன் பின் மனைவிக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் திடீரென்று கணவன் மூன்று முறை தலாக் கூறியதால், மனைவி அவர் வீட்டு முன்பு நடத்திய போராட்டத்தை தொடர்ந்து பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளாவின் கோழிக்கோடு சேர்ந்தவர் பாத்திமா ஜுவிரியா, 24 வயதாகும் இவருக்கும், சமீர் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகள், 2 வயதில் ஒரு மகன் உள்ளனர். சமீர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீர் திடீரென்று மூன்று முறை மனைவியை தலாக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, கணவனின் வீட்டின் முன்பு குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் அங்கு பொலிசார் விரைந்து வந்து இது குறித்து விசாரித்துள்ளனர்.

விசாரணையில், சமீர்(35) சொந்த ஊர் வனிமேல், இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்து வருகிறார்

இஸ்லாத்தின் பாரம்பரிய முறைப்படி, ஆண்கள் தங்கள் மனைவியிடம் மின்னஞ்சல், வாய்மொழி அல்லது எந்த வடிவத்திலும் மூன்று முறை தலாக் கூறினால் விவாகரத்து ஆகிவிட்டது என அர்த்தம், அதே போன்று தான் திடீரென்று சமீர் மனைவியிட மூன்று முறை தலாக் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு வரை எந்த ஒரு பிரச்னையும் இல்லாத போது, கணவன் திடீரென்று இப்படி சொல்ல என்ன காரணம்? என்பது குறித்து அவர் இது குறித்து கணவன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது புகார் கொடுத்துள்ளார். ஆனால் அதில் தாமதமாகி வருகிறது,

அதுமட்டுமின்றி சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த சமீர் வேறொரு பெண்ணை திருமணம் செய்யவுள்ளார் என்ற தகவல் கிடைத்ததால் அதிர்ச்சியடைந்த பாத்திமா ஜுவிரியா கணவர் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers