இணையத்தில் பரவும் சர்ச்சையை கிளப்பிய மோடியின் புகைப்படம்.. யார் அந்த பெண்? உண்மை பின்னணி வெளியானது

Report Print Basu in இந்தியா

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெண் ஒருவருக்கு தலைவணங்கும் இணையத்தில் வைரலாகும் வரும் புகைப்படம் குறித்த உண்மை பின்னணி வெளியாகியுள்ளது.

விமான நிலையத்தில், மோடி பெண் ஒருவருக்கு தலைவணங்குகிறார். அதில். அப்பெண்ணின் முகம் தெளிவாக தெரியவில்லை. இந்நிலையில், மோடி, தொழிலதிபர் அதானியின் மனைவி பிருதி அதானிக்கு தலைவணங்கியதாக குறித்த புகைப்படம் வைரலானது.

இந்நிலையில், குறித்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது, அதில் இருக்கும் பெண் யார் என்பது குறித்த உண்மை தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த புகைப்படம் செப்டம்பர் 2014ம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் உள்ள Tumakuru நகரில் எடுக்கப்பட்டுள்ளது.

altnews

சம்பவத்தன்று இஸ்ரோவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட மோடி, உணவு பூங்கா திறந்து வைக்க Tumakuru நகரத்தில் தரையிறங்கினார். அப்போது, அவரை வரவேற்க வந்த Tumakuru நகர மேயர் கீதா ருத்ரேஷ்க்கு மோடி தலைவணங்கி வரவேற்பை ஏற்றுள்ளார்.

குறித்து புகைப்படம் அப்போதைய செய்திதாள்களிலும் வெளியாகியுள்ளது. எனவே, மோடி பிருதி அதானியின் மனைவிக்கு தலைவணங்குவதாக பரப்பப்பட்டு வந்த வதந்திக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்