கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் ஜாலியாக இருந்த முருகன்.. அவரின் சொகுசு வேனில் இருந்த வசதிகள்

Report Print Raju Raju in இந்தியா

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளையில் பயன்படுத்தப்பட்ட வேனை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

தமிழகத்தின் திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரி கடையில் கடந்த 2ஆம் திகதி அதிகாலை கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. தீவிர விசாரணைக்குப் பின் திருவாரூரைச் சேர்ந்த மணிகண்டன், கனகவள்ளி, கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கொள்ளையில் ஈடுபட்ட சுரேஷ் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் முக்கிய குற்றவாளியான முருகனும் சரணடைந்தார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையடித்த நகைகளை வைத்து தமிழ், தெலுங்கு நடிகைகளுடன் ஜாலியாக இருந்ததாக தெரியவந்தது.

திருச்சியில் கொள்ளையடித்த இதே கும்பல் தான் கடந்த ஜனவரி மாதம் மதுரை பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நடைபெற்ற கொள்ளையிலும் ஈடுபட்டதை பொலிசார் உறுதி செய்தனர்.

இது குறித்து சுரேஷ் அளித்த வாக்குமூலத்தில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த 470 சவரன் நகைகளை உருக்கி விற்றதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையில் பஞ்சாப் நேஷனல் வங்கி, லலிதா ஜூவல்லரி கொள்ளைகளுக்கு பயன்படுத்திய சுற்றுலா சொகுசு வேன் ஒன்றையும் பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

முருகன் கொடுத்த தகவலின்படி மறைத்து வைக்கப்பட்டிருந்த வேனை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்டவுடன், சுற்றுலா பயணிகள் போல கொள்ளைக்கும்பல் வேனில் ஏறி தப்பித்துச்சென்று விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

மேலும் வேனிலேயே கேஸ் கட்டிங் மெஷின், சிலிண்டர், கடப்பாரை, கயிறு உள்ளிட்ட கருவிகளும் கேஸ் சிலிண்டர், எடை போடும் மெசின் போன்ற பல்வேறு வசதிகளும் உள்ளது தெரியவந்துள்ளது.

இதோடு டியோவில் படம் பார்ப்பது, ஆடல் பாடலுடன் மகிழ்ச்சியாக இருப்பது என முருகன் உள்ளிட்ட கொள்ளையர்கள் குதூகலமாக இருந்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்