சீமான் ஒரு ஜோக்கர்! அவரால் ஈழத்தமிழர்களுக்கு தான் பாதிப்பு... அரசியல் பிரபலங்களின் கருத்து

Report Print Raju Raju in இந்தியா

ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரை கடுமையாக விமர்சித்து அரசியல் பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விக்ரவாண்டி தேர்தல் பிரசாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆம் நாங்கள் தான் ராஜீவ்காந்தியை கொன்றோம் என கூறினார்.

இதோடு திமுக - காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக விமர்சித்து பேசினார்.

இந்நிலையில் சீமான் போல் விடுதலை புலிகள் இயக்கத்தின் மீது பற்று கொண்ட தலைவர்கள் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

மதிமுக எம்.பி கணேசமூர்த்தி கூறுகையில், சீமானின் பேச்சின் மூலம் ஏழு பேர் விடுதலைக்கு பெரிய தீங்கு நேரும். அவர் என்னமோ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர் போல ஆமா நாங்கள்தான் கொன்றோம் என்று பேசியிருக்கிறார். ஏழு பேர் விடுதலைக்கு மட்டுமில்லை, ஈழத்தை சேர்ந்த தமிழர்களுக்கும் இவரது பேச்சால் பாதிப்பு உருவாகும் என்கிறார்.

மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறுகையில், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக தேவையில்லாமல் பேசியிருக்கிறார் சீமான். உண்மை என்னவென்றால், தான் நேசிப்பதாக சீமான் சொல்லிக் கொண்டிருக்கும் விடுதலைப்புலிகளுளின் நலன்களுக்கே எதிராகத்தான் சீமான் பேசியிருக்கிறார் என்கிறார்

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறுகையில், சீமான் ஒரு ஜோக்கர். அவரது பேச்சும் ஜோக்கர்தனமாகத்தான் இருக்கும். அவரது பேச்சை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

ஆனால் இவரது பேச்சாலெல்லாம் ஏழு பேர் விடுதலைக்கு எந்த பாதிப்பும் வராது என்று நினைப்பதாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்