7 தமிழர்கள் விடுதலையை தடுக்க சதி! சிறையில் சிக்கியது என்ன? வெளியான தகவல்

Report Print Raju Raju in இந்தியா

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகனிடமிருந்து ஆண்ட்ராய்டு போன் கைப்பற்றப்பட்டதாக சிறைத்துறை கூறிய நிலையில் ஏழு பேரின் விடுதலையை தடுக்க சதித்திட்டம் நடப்பதாக அவர் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய நளினி, வேலூர் மத்திய பெண்கள் சிறையிலும் அவரது கணவர் முருகன், மத்திய ஆண்கள் சிறையிலும் 28 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனையை அனுபவித்துவருகிறார்கள். லண்டனில் இருக்கும் மகள் ஹரித்ராவுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்துவைக்க நளினி-முருகன் தம்பதி விருப்பப்பட்ட நிலையில் நளினி பரோலில் வெளியில் வந்தார்.

ஆனால் லண்டனில் இருக்கும் மகள் இந்தியா வரவில்லை.

இந்நிலையில் செப்டம்பர் 15-ம் திகதி பரோல் காலம் முடிந்து சிறைக்குத் திரும்பினார். இந்த நிலையில், தன் கணவர் முருகனின் தந்தை, இலங்கையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக தமிழகம் வரவிருக்கும் அவருக்கு உதவியாக இருக்க ஒரு மாதம் பரோல் வேண்டும் என நீதிமன்றத்தில் மீண்டும் நளினி மனு அளித்துள்ளார்.

அந்த மனு பரிசீலனையில் இருக்கும் நிலையில், பரோல் கிடைக்க வாய்ப்பில்லை என்று முன்கூட்டியே தகவல்கள் வருகின்றன.

இதனிடையே, முருகன் இருக்கும் அறையிலிருந்து சிம் கார்டு பொருத்தப்பட்டிருந்த ஆன்ட்ராய்டு செல்போனை பறிமுதல் செய்திருப்பதாக, சிறைத்துறை தரப்பில் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முருகன் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.

இதுபற்றி முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில், முன் விடுதலையைத் தடுப்பதற்காக சிறைக்குள் நளினி, முருகனுக்கு எதிராகச் சதி நடக்கிறது.

சிறைக் குற்றங்களைச் செய்தவர்களை, முன் விடுதலை செய்ய முடியாது.

ஏழு பேர் விடுதலை தொடர்பான பேச்சு தீவிரமாக இருக்கும் நிலையில், அதனைத் தடுப்பதற்காக சில அதிகாரிகள் இவ்வாறு செய்வதாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்