வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பிய பெண்ணுக்கு ஏற்பட்ட மாற்றம்... நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் இளம்பெண்ணும் அவர் ஐந்து வயது மகளும் மர்மமாக இறந்த வழக்கில் திடீர் திருப்பமாக தாயே மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.

கோவை மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் - லீலாவதி தம்பதிக்கு வேதவள்ளி என்ற மகளும், மாதவன் என்ற மகனும் உள்ளனர்.

வேதவள்ளி தனது 5 வயது மகள் கார்குழலியும் பெற்றோர் மற்றும் சகோதரருடன் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு குழந்தை கார்குழலிக்கு உடல்நிலை சரியில்லை என ராமகிருஷ்ணன், லீலாவதி, மாதவன் ஆகியோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மாதவன் தலையில் அடிபட்டு ரத்தம் வந்துகொண்டிருந்ததைப் பார்த்ததாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர். வேதவள்ளி மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.

மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். மாதவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவலின் அடிப்படையில் வந்த பொலிசார் விசாரணையில் இறங்கினர்.

இந்த நிலையில் காலை ராமகிருஷ்ணனின் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீடு உட்பக்கமாக தாழிடப்பட்டிருந்திருக்கிறது.

கதவை நெடுநேரம் தட்டியும் வேதவள்ளி திறக்காத நிலையில், ஜன்னலை உடைத்து பார்த்தபோது உள்ளே அவர் தூக்கில் தொங்கியது தெரியவந்துள்ளது.

நள்ளிரவில் என்ன நடந்தது என்பது குறித்து ராமகிருஷ்ணனிடம் பொலிசார் விசாரித்தனர். அப்போது வேதவள்ளி அமெரிக்காவில் வசித்து வந்த நிலையில், திடீரென அவரது கணவர் இறந்துள்ளார்.

பின்னர் 5 வயது மகள் கார்குழலியுடன் ஊர் திரும்பிய வேதவள்ளிக்கு மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டார்.

இதற்காக சிகிச்சையும் எடுத்துவந்துள்ளதாகத் சொல்லப்படுகிறது.

மனநலப்பிரச்னை காரணமாக வேதவள்ளி, திடீர் திடீரென மூர்க்கம் கொண்டு பக்கத்தில் இருப்பவர்களை தாக்குவதோடு, அருகிலுள்ள பொருட்களையும் அடித்து நொறுக்குவார் என்று கூறப்படுகிறது.

சம்பவத்தன்று நள்ளிரவில் வழக்கம்போல் மூர்க்கமடைந்து அங்கிருந்த டிவி உள்ளிட்ட பொருட்களையும் அடித்து நொறுக்கியுள்ளார்.

அவரை தம்பி மாதவன் கட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது, இருசக்கர வாகனத்துக்கு காற்றடிக்கும் பம்ப்பைக் கொண்டு தாக்கியதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தின் போது வேதவள்ளி குழந்தையின் கழுத்தில் காலை வைத்து மிதித்துள்ளார்.

மயக்க நிலையில் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட குழந்தை கார்குழலி வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக ராமகிருஷ்ணன் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்