புலிகள் தலைவர் என்னிடம் பேசினார்: முக்கிய தகவலை வெளியிட்ட நாம் தமிழர் சீமான்

Report Print Basu in இந்தியா

ஈழத்தில் இந்திய அமைதிப் படை செய்த அட்டூழியம் குறித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என்னிடம் பேசினார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தனியார் நிகழ்ச்சி நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்ட சீமான் கூறியதாவது, ராஜீவ் காந்தியை நாங்கள் கொன்றோம் என கூறி வேண்டிய அவசியம் பிரபாகரனுக்கு ஏற்படவில்லை.

ஆனால், என்னிடத்தில் அவர் கூறியதாவது, இந்திய அமைதிப்படை நமது நிலத்தில் இருந்த அந்த மூன்றாண்டு காலம், நமது விடுதலைப் போராட்டத்தில் கருப்பு காலங்கள் என பதிவு செய்தார்.

சிங்கள ராணுவம் நமது மக்களை துன்புறுத்தியது, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொன்று குவித்ததை விட, இந்திய ராணுவப்படை அதிகமாக செய்தது என தன்னிடம் பிரபாகரன் கூறியதாக சீமான் தெரிவித்தார்.

மேலும் பேசிய சீமான், எனவே, 28 ஆண்டுகளாக அனைத்து தரப்பும் கூறிவருவது போல் தான் நானும் தமிழர்கள் ராஜீவ் காந்தியை கொன்றுவிட்டார்கள் என கூறினேன், அது வரலாறு தானே என சீமான் தெரிவித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்