இறுதி சடங்கின் போது திடீரென அசைந்த சடலம்... அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!

Report Print Vijay Amburore in இந்தியா

ஜெய்ப்பூரில் இறுதிச்சடங்கின் போது திடீரென சடலம் அசைவதை பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஜெய்ப்பூர் மாநிலத்தை சேர்ந்த 30 வயதான பப்பு ரெய்கர் என்கிற நபர் நேற்றைய தினம் இயற்கையான முறையில் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து இறுதிச்சடங்கு நிகழ்விற்கு ஏற்பாடு செய்து அவருடைய உடலை சுடுகாட்டிற்கு எடுத்து சென்றுள்ளார்.

ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென பப்புவின் உடல் அசைந்து அவருடைய வாயிலிருந்து நுரை தள்ளியிருக்கிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக உடலை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். ஆனால் இதனை நம்பாத உறவினர்கள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர் இறந்ததற்கான அறிக்கை குறித்தும் காவல்துறையினரிடம் கொடுக்க மறுத்துவிட்டனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பப்பு ரெய்கர், அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து அதிகபடியான மதுவை உட்கொண்டு உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்