35 வயதில் உயிரிழந்த மனைவி! அவர் கல்லறையின் மீது சடலமாக கிடந்த கணவன்... அருகில் கிடந்த பொருள்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் மனைவியின் கல்லறை மீது கணவன் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்மிடிப்பூண்டி அடுத்த கொண்டமாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் (40). இவர் மனைவி அம்பிகா (35). தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அம்பிகா கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார்.

அவருக்காக கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் கல்லறையும் கட்டப்பட்டுள்ளது.

சிவகுமாருக்கும் அவரது மனைவியின் உறவினர்களான சுலோக்சனா, கமல், நாகராஜ், முருகன் ஆகியோருக்கும் இடையே நகை பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததது.

இதனையடுத்து மேற்கண்ட நபர்கள் தன்னை அடித்ததாக கடந்த மாதம் 21ஆம் திகதி சிவகுமார் பொலிசில் புகார் அளித்தார்.

இந்நிலையில், நேற்று காலை சுடுகாட்டில் உள்ள தனது மனைவியின் கல்லறையின் மீது சிவகுமார் சடலமாக கிடந்தார். அவருக்கு அருகில் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்து பாட்டில் கிடந்தது.

இதனையறிந்த ஊர் மக்கள் அங்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு சிவகுமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது புகார் குறித்து பொலிசார் முன்னரே சரியாக விசாரிக்கவில்லை என்றும் கோஷம் எழுப்பினர்.

தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் கிராம மக்களிடம் 4 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சிவகுமாரின் மரணத்தை சந்தேக சாவாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்