50கோடி மதிப்பிலான நகைகளை சுருட்டிய கொள்ளையர்கள்... தமிழகத்தில் நடந்த துணிகர சம்பவம்

Report Print Kavitha in இந்தியா

காந்தி ஜெயந்தியான இன்று திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லர்ஸ்-ல் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் திருடப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

பல கிளைகள் கொண்ட லலிதா ஜுவல்லர்ஸ், தமிழகத்தில் பெரிய நகை கடை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதில், திருச்சியில் அமைந்துள்ள கடையில் சுவரில் துவாரமிட்டு திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடையில் இருந்த சிசிடிவி கமெரா பதிவுகளை ஆய்வு செய்ததில் கொள்ளையர்கள் இருவர் இன்று அதிகாலை 2.30 மணி முதல் விடியற்காலை 4.30 மணி வரை கடைக்குள் குழந்தைகள் விளையாடும் பொம்மை முகமூடிகளை அணிந்தவாறு நடந்து வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் தலைமையிலான பொலிஸார் நகைக் கடையின் மேல்தளத்தில்ஆய்வு செய்தனர்.

அதில், சுவர் வழியாக துவாரமிட்டு கொள்ளையர்கள் கடையில் நுழைந்துள்ளனர்.

lalitha jewellery theft - image vikatan

பொலிஸாரின் விசாரணை தொடர்வதால் கொள்ளை போன நகைகள் குறித்த முழு மதிப்பும் வெளிவரவில்லை.

இருப்பினும் கிட்டத்தட்ட 16 கிலோ தங்க நகைகள் மட்டுமல்லாமல், வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகளும் கொள்ளைபோனதால் அதன் மதிப்பு சுமார் 50 கோடிக்கும் மேல் இருக்கும் எனத் கூறப்படுகிறது.

மேலும், கொள்ளையடித்த நகைகளை எந்த வழியாக வாகனத்தில் எடுத்துச் சென்றார்கள் என்பது குறித்தும் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து பொலிஸார் நகைக்கடையில் பணியாற்றும் சுமார் 160-க்கும் மேற்பட்ட பணியாளர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

image vikatan
image vikatan
image vikatan
image vikatan
image vikatan

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்