டிக்டாக் மூலம் நானும் வில்லன்தான்.... அடுத்தடுத்து செய்த கொலைகள்: விழிபிதுங்கி நிற்கும் பொலிசார்!

Report Print Abisha in இந்தியா

உத்திரப்பிரதேசம் பிஜ்னார் பகுதியில் 5நாட்களுக்குள் 3கொலைகள் அடுத்தடுத்து செய்து பொலிசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளார் டிக்டாக் பிரபலம்.

பிஜ்னார் பகுதியை சேர்ந்த பாஜக பிரமூகரின் மகன் அஷ்வினி குமார். 30வயதான இவர், டிக்டாக் மூலம் தன்னை ஒரு வில்லன் என்று பலருக்கும் அறிமுகம் செய்து வந்துள்ளார்.

போதை பொருட்களுக்கு அடிமையான அஷ்வினி, மற்றொரு பாஜக பிரமூகர் ஒருவரின் மகன் மற்றும் மருமகனை சுட்டுக்கொன்றுவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

பின்னர் மீண்டும் திங்கள்கிழமையில், நிகிதாசர்மா என்ற பெண்ணை சுட்டுக்கொன்றுள்ளார்.

துபாயில் வேலைபார்த்துவந்த நிகிதா தன்னுடைய திருமணத்திற்காக பிஜ்னாருக்கு வந்துள்ளார். அப்போது அவரை சுட்டுதள்ளியுள்ளார் அஷ்வினி.

இது குறித்து நிகிதாவின் உறவினர்களிடம் பொலிசார் விசாரிக்கையில், நிகிதாவிற்கும் அஸ்வினிகுமாருக்கும் 2002ஆம் ஆண்டு பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதன்பின் துபாய் சென்ற நிகிதா தற்போது நாடு திரும்பியுள்ளார். அதை மனதில் வைத்துக்கொண்டு அஸ்வினி இப்படி செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் முன்னர் நடந்த இரண்டு கொலைகளுக்கான காரணம் என்ன என்பது குறித்து பொலிசாருக்கு துப்புகிடைக்காமல் குழப்பமடைய செய்துள்ளது.

எனினும் தலைமறைவாக இருக்கும் அஸ்வினி மேலும், இதுபோன்ற செயல் செய்யாமல் தடுக்க பொலிசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்