ஆபாசமாக பேசிய மாமியாரை வெந்நீர் ஊற்றி கொலை செய்த மருமகள்.. குடும்பத்துடன் கைது!

Report Print Kavitha in இந்தியா

திருவண்ணாமலை மாவட்டத்தில் மருமகளும், அவரது குடும்பத்தினரும் திட்டமிட்டு மாமியார் மீது வெந்நீர் ஊற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தூசி பகுதியை சேந்தவர் கணேசன் முனியம்மாள் தம்பதியினர். 55வயதான முனியம்மாளின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்ததால், அவர் மகன் வெங்கடேசன், மருமகள் ஜோதியுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஜோதிக்கும், முனியம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 29ஆம் திகதி ஏற்பட்ட தகராறில் முனியம்மாள் ஜோதியை ஆபாசமாக திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரத்தில் இருந்த ஜோதி தனது குடும்பத்தினரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அவர்கள் கொடுத்த திட்டத்தின்படி முனியம்மாள் இரவில் உறங்கிகொண்டிருந்த போது, வெந்நீருடன் வந்த ஜோதி அவர் தலையில் ஊற்றியுள்ளார். பின் ஒரு கம்பால் முனியம்மாளின் தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த முனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்

பின் அங்கிருந்து தப்பி ஓடிய ஜோதி தன் தாய் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தூசி பொலிசார் முனியம்மாளின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின், தாய்வீட்டில் பதுங்கியிருந்த ஜோதியை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின் தந்தை ஏழுமலை, தாயார் கண்ணியம்மாள் (65), சகோதரன் விநாயகம் (32) ஆகியோர் உடந்தையாக இருந்ததை அறிந்த பொலிசார் கண்ணியம்மாள், விநாயகம் ஆகியோரை கைது செய்தனர்.

இதில் தலைமறைவாக உள்ள ஏழுமலையை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்