இறந்த தந்தையின் உடல் அடக்கம் செய்த போது 14 வயது மகள் முழங்கிய வார்த்தை... நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சி.ஆர்.பி. எப் வீரரின் உடல் சொந்த ஊருக்கும் கொண்டு வரப்பட்டதால், அவரின் உடலைப் பார்த்து 14 வயது மகள் வீர வணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தியது பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர், செந்தில்குமார். இவர் மத்திய துணை ராணுவப் படையான சிஆர்பிஎப் பிரிவில் அந்தமானில் தலைமைக் காவலராகப் பணியாற்றிவந்தார்.

இவருக்கு சந்திரகலா என்ற மனைவியும், 14 வயதில் ஸ்ரீதன்யா என்ற ஒரே மகளும் உள்ளனர்.

இந்நிலையில் செந்தில் குமார் பணியில் இருந்த போது, கடலில் ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து செந்தில் குமாரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

அப்போது அங்கிருந்த கிராம மக்கள் ஏராளமானோர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர், அதன் பின் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, முழு இராணுவ மரியாதையுடன் செந்தில்குமார் உடல அடக்கம் செய்யப்பட்டது.

அங்கும் அவரது மகள் ஸ்ரீதன்யாபரேட் சல்யூட் என்று முழங்கினார். அதன் பின் செந்தில் குமார் உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி மடித்து ஸ்ரீதன்யாவிடம் கொடுத்த போது, தேசியக் கொடியை முகத்தில் இறுக அணைத்து முத்தம் கொடுத்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்