மகன் பிறந்தநாளில் தமிழ் தம்பதியர் செய்த நெகிழ்ச்சி செயல்... வைரலாகும் புகைப்படத்திற்கு குவியும் பாராட்டு

Report Print Santhan in இந்தியா
571Shares

தமிழகத்தில் தன்னுடைய மகனின் பிறந்தநாளில் பெற்றோர் ஆயிரம் மரக்கன்றுகளுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளது பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சு மாவட்டத்தின், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் பளையகுஞ்சரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். புகைப்பட கலைஞரான இவருக்கு நர்மதா என்ற மனைவி உள்ளார்.

நர்மதா பல்லகச்சேரி அரசு பட்டதாரி ஆசிரியை.

இந்நிலையில், இவர்கள் இருவரும் தனது பிள்ளையின் பிறந்தநாள் விழா கொண்டாட பணத்தை தேவையற்ற முறையில் செலவு செய்வதை விட மரக்கன்றுகள் நடலாம் என யோசித்துள்ளனர்.

இதனால் இருவரும் ஊரில் உள்ள முக்கியஸ்தர்கள் அனைவரிடமும் சந்தித்து கிராமத்தில் உள்ள பொது இடங்களில் வைக்க அனுமதி கேட்க, கிராமமே ஒன்றுகூடி இந்த மகிழ்ச்சியான விழாவை கொண்டாடுங்கள் என சந்தோஷமான செய்தியை சொன்னவுடன் அடுத்த நிமிடமே மரக்கன்றுகளுக்கு முன்பணம் கொடுத்து அதற்குண்டான ஏற்பாடுகளை வெங்கடேசன் செய்ய ஆரம்பித்தார்.

ஞாயிற்றுக்கிழமையான இன்று நாளை சுமார் 10 மணி அளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளுடன் அவருடைய மகன் ஆருத்ரனின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதால், பலரும் இந்த தம்பதிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்