சாப்பாடு கூட தர மறுத்தார்கள்.... அறையில் பூட்டி வைத்து சித்திரவதை: குமுறும் ஐஸ்வர்யா ராய்

Report Print Arbin Arbin in இந்தியா
799Shares

பீகார் மாநிலம் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மருமகள் ஐஸ்வர்யா ராய் தம்மை வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக புகார் அளித்துள்ளார்.

கணவருடன் பிரிந்து வாழும் தம்மை, மாமியாரும் கணவரின் சகோதரியான மிஸா பாரதியும் சேர்ந்து குடியிருப்பில் இருந்து வெளியேற்றியதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கடந்த 3 மாதங்களாக ராப்ரி தேவியும் குடும்பமும் தமக்கு சாப்பாடு தராமல் துன்புறுத்தியதாகவும்,

சமையல் அறைக்கு செல்லவே தடை விதித்திருந்ததாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். மிஸா பாரதியின் சொல்பேச்சு கேட்டே இவ்வாறு தம்மை கொடுமைப்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இத்தனை நாளும் தமது பெற்றோர் அனுப்பி வைத்த உணவு சாப்பிட்டே காலம் தள்ளியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிஸா பாரதி தம்மை கொடூரமாக துன்புறுத்தியதாகவும், ராப்ரி தேவிக்கு இது அனைத்தும் தெரியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது கணவருடன் உறவை மேம்படுத்த மிஸாவுக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ராஷ்டிரிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராயை தேஜ் பிரதாப் திருமணம் செய்துகொண்டார். திருமணமான 6 மாதங்களிலேயே விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை தேஜ் பிரதாப் அணுகினார்.

ஆனால் இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரு வீட்டார்களும் ஐஸ்வர்யா ராயை தேஜ் பிரதாப் உடன் லாலு பிரசாத் யாதவ் வீட்டிலேயே தங்க வைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்