முறையற்ற உறவில் பிறந்த குழந்தை.. தாய் செய்த கொடூர செயல்!

Report Print Kabilan in இந்தியா
283Shares

தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையைக் கொலை செய்த தாயையும், அவரது கணவரின் அண்ணனையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள சேவூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குமார். இவரது மனைவி சோலையம்மாள். இந்த தம்பதிக்கு 4 பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் கருவுற்ற சோலையம்மாள், கடந்த 14ஆம் திகதி ஆரணி அரசு மருத்துவமனையில் 5வது ஆக பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.

அதனைத் தொடர்ந்து, 16ஆம் திகதி சோலையம்மாள் குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்து தலைமறைவானார். இதனை அறிந்த மருத்துவர் ஆனந்தன், இதுகுறித்து பொலிசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் சோலையம்மாளை தேடி வந்த பொலிசார், சென்னையில் அவரையும், அவரது கணவரின் அண்ணன் பாபுவையும் கண்டுபிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், முறையற்ற உறவில் பிறந்த குழந்தை என்பதால் அதனை கொன்றுவிட்டதாகவும், சேவூரில் உள்ள விளைநிலத்தில் குழந்தையின் உடலை புதைத்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து இருவரையும் கைது செய்த பொலிசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்