சென்னையில் நண்பரின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு திரும்பிய மாணவர்கள்.. அடுத்து நேர்ந்த விபரீதம்!

Report Print Kabilan in இந்தியா
197Shares

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், அதிவேகமாக சென்ற கார் விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

வண்டலூர் அருகே இயங்கிவரும் கல்லூரி ஒன்றில் படிக்கும் 7 மாணவர்கள், தங்களது நண்பனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக கிழக்கு கடற்கரை சாலைக்கு சென்றுள்ளனர்.

சனிக்கிழமை இரவு அங்கு சென்ற மாணவர்கள், பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு காரில் திரும்பியுள்ளனர். காரை ஓட்டிய மாணவன் அதிவேகத்தில் செலுத்தியதாக தெரிகிறது. அதிகாலை 2 மணியளவில் ஈஞ்சம்பாக்கம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அவர்களின் கார் சாலையில் இருந்த தடுப்புச்சுவரில் மோதிய வேகத்தில், சில மீற்றர் தூரத்திற்கு உருண்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே அகமது பாகிம், சபின் ஆகிய மாணவர்கள் பலியாகினர்.

ஒரு மாணவர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், 4 மாணவர்கள் படுகாயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரை ஓட்டிய மாணவர் சீட்பெல்ட் அணிந்திருந்ததால் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் மூலம், அதிவேகமாக காரை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, காரை ஓட்டிய மாணவரை கைது செய்துள்ள பொலிசார், அவர் மீது அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், விபத்து ஏற்படுத்தி மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்