ஐநாவில் இருந்து வந்த அழைப்பு.. தமிழ் சிறுமிக்கு கிடைத்த பெருமை!

Report Print Vijay Amburore in இந்தியா
211Shares

ஐநா மனித உரிமை கவுன்சிலில் கலந்துகொண்டு பேசுவதற்காக, தமிழகத்திலிருந்து ஆதிதிராவிடர் பள்ளியில் படித்த மாணவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த பிரேமலதா என்கிற மாணவி ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். 8ம் வகுப்பு படிக்கும்போதே தமிழக அரசின் மனித உரிமை கல்வி பயின்று மனித உரிமைக் கல்வி வகுப்புகளில் பங்குபெற்றிருந்தார்.

தற்போது கல்லூரியில் பயின்று வரும் பிரமலதா அக்டோபரில் ஜெனிவாவில் நடக்கும் ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்.

மனித உரிமை கல்வி மூலம் குழந்தைகள், இளைஞர்களின் உரிமைகளை மேம்படுத்துவது குறித்து பேசுவதற்காக ஐநா மனித உரிமை கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளியில் படித்த மாணவி ஒருவர் முதன்முறையாக ஐநாவில் பேச இருப்பதால் அவருக்கு பல பக்கங்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இது தனக்கு உற்சாகத்தையும் பெருமையையும் சேர்த்திருப்பதாக பிரேமலதா கூறியுள்ளார்.

முன்னதாக ராமநாதபுரம் முகமது தஸ்தகீர் ஆசிரியர் பயிற்சி கல்லுாரி மாணவி அப்ரின் வஜிஹா, செய்யதம்மாள் கல்லுாரி மாணவி மகேஸ்வரி ஆகியோர் ஐக்கிய நாடுகள் சபையின் மாணவப் பிரதிநிதிகளாக நியமிக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்