மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் ஹோட்டல் அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ரிசார்ட் ஒன்றில், அபிஷேக் சக்சேனா (44) என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் புதன்கிழமை அறை எடுத்து தங்கியுள்ளார்.
காலையில் விடிந்து நீண்ட நேரமாகியும் அறையிலிருந்து யாரும் உணவு சாப்பிட வராததால் சந்தேகமடைந்த ஊழியர்கள், கதவை திறந்து பார்த்துள்ளார்.
அப்போது உள்ளிருந்த நான்கு பேருமே வாயில் நுரைதள்ளி சடலமாக இறந்து கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் நான்கு பேரின் உடலைகளையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அபிஷேக் சமீபத்தில் தன்னுடைய வேலையை இழந்துள்ளார். இதனால் ஆன்லைன் மூலம் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த அவருடைய மனைவி ப்ரீத்தி குடும்ப செலவை சமாளிக்க முடியாமல் திணறியுள்ளார்.
இந்த நிலையில் ஆன்லைனில் சோடியம் நைட்ரேட் ஆர்டர் செய்த தம்பதியினர், தங்களுடைய 14 வயது இரட்டையர்களாக மகன் அத்வைத் மற்றும் மகள் அனன்யா ஆகியோருக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.