சமூக வலைதளங்களில் பரவி வரும் உல்லாச வீடியோவில் இருப்பது தான் அல்ல என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
தி.மு.க ஆதரவாளராக இருந்து வரும் நாஞ்சில் சம்பத், விடுதி அறை ஒன்றில் இளம்பெண் ஒருவருடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஆனால், வீடியோவில் இருப்பது தான் அல்ல என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நாஞ்சில் சம்பத் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், ‘என் எச்சிலை மைய்யாக்கி எழுதியவர்களை தாண்டித்தான் இந்த உயரத்திற்கு வந்துருக்கிறேன். ஏனோ தானோ பேர்வளிகள் என்னை அழுக்காக்கி அசிங்கப்படுத்தலாம் என்று கருதுகிறார்கள்.
அவர்கள் கருதுவது கை கூடாது; சங்கு சுட்டாலும் வெண்மை தரும் சோதனைகள் வந்தாலும் என் சுய மரியாதைக்கு பங்கம் வராமல் எப்போதும் நடப்பேன். மானமும் மரியாதையும் என் மரபணுவோடு கலந்தது. புரிந்தவர்களுக்கு புரிந்தால் சரி. என் பயணம் தொடரும்’ என தெரிவித்துள்ளார்.
என் உறவுகளுக்கு... pic.twitter.com/XdpmrXez2c
— Nanjil Sampath (@NanjilPSampath) September 28, 2019
எல்.கே.ஜி, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற படங்களில் நாஞ்சில் சம்பத் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.