மனைவியுடன் சேர்ந்து பெற்ற தாயை எட்டி உதைத்து செருப்பால் அடித்த மகன்... நீதிமன்றம் கொடுத்த தண்டனை!

Report Print Raju Raju in இந்தியா
196Shares

சென்னையில் வயதான தாயை செருப்பால் அடித்த மகன் முதியோர் இல்லத்துக்கு ரூ 10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீலதா (75). இவரது மூத்த மகன் ஸ்ரீதர் (54). மருமகள் காயத்திரி (54). தம்பதிகள் தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில், ஸ்ரீதர் தனது வீட்டுக்கு வந்து சொத்துக்காக சண்டை போட்டதாகவும், அப்போது இளைய மகனுக்கு தகவல் தெரிவிக்க சென்றபோது தன்னை ஸ்ரீதர் செருப்பால் அடித்ததாகவும் எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தார்.

மேலும் மருமகளும் மகனுடன் சேர்ந்து என்னை எட்டி உதைத்தார். இருவரும் கொலை மிரட்டல் விடுத்தனர் என்றும் கூறியிருந்தார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய பொலிசார் ஸ்ரீதர் மற்றும் காயத்திரி மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு இருவரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் இருவருக்கும் நீதிபதி நிபந்தனை முன்ஜாமீன் வழங்கினார்.

மேலும், ஸ்ரீதர் சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் முதியோர் இல்லத்துக்கு அக்டோபர் 4ம் திகதிக்குள் 10 ஆயிரம் வழங்க வேண்டும்.

மேலும் இருவரும் 2 வாரம் மதுரையில் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்