வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த கணவன்! அதிகாலையில் மொட்டை மாடியில் மனைவி கண்ட காட்சி

Report Print Raju Raju in இந்தியா
4443Shares

வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த நபர் கழுத்து அறுப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்த அவர் மனைவி அதிர்ச்சியில் உறைந்தார்.

தமிழகத்தின் காரைக்குடியை சேர்ந்தவர் மணிமுத்து. இவர் கட்டாரில் வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

நேற்று இரவு மணிமுத்து வீட்டின் மொட்டை மாடிக்கு தூங்கச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் மனைவி பூமதி அதிகாலை மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கு மணிமுத்து கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியுற்றார்.

இதுபற்றி தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து மணிமுத்துவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொலிசாரின் விசாரணையில் மணிமுத்துவுக்கும் அவரது உறவினர்களுக்கும் பூர்விக சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக மணிமுத்து கொலை செய்யப்பட்டாரா அல்லது, வேறு காரணமா என பொலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்