கணவர் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் அவர் அண்ணனின் பெயர்... பிரபல ரவுடியின் என்கவுண்டர் வழக்கில் திருப்பம்!

Report Print Raju Raju in இந்தியா
207Shares

சென்னையில் பொலிசாரால் என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி மணிகண்டன் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியான ஆரோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான குயிலாப்பாளையத்தை சேர்ந்தவர் தாதா மணிகண்டன் (39).

இவர் மீது 8 கொலை வழக்குகள், வெடிகுண்டு வீசுதல், கொலை மிரட்டல், கொலை மற்றும் கொள்ளை முயற்சி உள்ளிட்ட 26 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

மணிகண்டனின் தொழில் போட்டியாளரான ராஜ்குமார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மணிகண்டன் போட்டியின்றி வலம் வந்தார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள பெண் மருத்துவர் ஒருவருடன் காதல்வயப்பட்டு திருமணம் செய்துகொண்ட மணிகண்டன் திருந்தி வாழ போவதாக பொலிசில் கூறிய நிலையில் அவரின் தம்பியை ராஜ்குமார் தரப்பு கொலை செய்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தன்னுடைய பழைய தொழிலுக்கே திரும்பினார். பின்னர் தொடர்ந்து பல கொலைகளில் செய்யும் பணியிலும் ஈடுபட்டார்.

இந்த சூழலில் சென்னை அண்ணாநகரில் மணிகண்டன் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் பொலிசார் அங்கு வந்தனர்.

அப்போது பொலிசாருக்கும் மணிகண்டனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அவரை பொலிசார் சுட்டு கொன்றனர்.

இதனிடையில் தாதா மணிகண்டனின் என்கவுன்டரில் சந்தேகங்கள் எழுந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதை உறுதிப்படுத்தும் வகையில் மாஜிஸ்திரேட் தனஞ்செழியனிடம் மணிகண்டன் தரப்பு சில தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.

மணிகண்டனின் தம்பி மனைவி தான் பிலோமினா. இவருக்கு மூன்று குழந்தைகள். பிலோமினாவின் அடையாள அட்டையில் கணவர் என்று குறிப்பிடும் இடத்தில் மணிகண்டனின் பெயர் உள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்கவுன்டர் நடந்தபோது வீட்டில் இருந்த மூன்று குழந்தைகளிடம் தனஞ்செழியன் விசாரித்த போது மூவரும் என்கவுன்டர் பொலிஸ் டீம் நடந்துகொண்ட விதத்தை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது மணிகண்டனுக்கும் பொலிசாருக்கும் நடந்த மோதலில் மூன்று குண்டுகள் அவரின் நெஞ்சுப் பகுதியில் பாய்ந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், மணிகண்டன் இறந்தநிலையில் பிலோமினா, குழந்தைகளின் ஆறுதலுக்காக உருக்கமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதையும் விசாரணையின்போது குழந்தைகள் கூறியுள்ளனர்.

இதையெல்லாம் பார்க்கும் போது மணிகண்டன் என்கவுண்டரில் உள்ள மர்மம் விரைவில் விலகும் என தெரிகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்