தமிழகத்தில் மனைவி உயிரிழந்த சில மணி நேரத்தில் கணவர் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் மறவாமதுரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பையா ( 50) அவரது மனைவி கருப்பாயி (45).
கருப்பாயி கடந்த சில நாட்களாக மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மனைவியின் உயிரைக் காப்பாற்ற கணவர் பல வழிகளிலும் முயற்சித்தார். ஆனால் நேற்று கருப்பாயி உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை கருப்பாயி உயிரிழந்தார்.
இதையடுத்து மனைவி மேல் அதிகளவு அன்பு வைத்திருந்த சுப்பையாவால் அவர் இறந்த துக்கத்தை தாங்க முடியவில்லை. இதனால் அவர் இறந்த சிறித்து நேரத்தில் தன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார்.
இதைப் பார்த்த அவரது மகன் பதறி தடுத்ததுடன் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.