சிறுமியின் பேச்சை கேட்டு ஆதிவாசி மனிதனை உயிருடன் எரித்து கொன்ற மக்கள்!

Report Print Vijay Amburore in இந்தியா
584Shares

சூனியம் வைத்ததாக கூறி, ஆதிவாசி மனிதர் உயிருடன் எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

செவ்வாய்க்கிழமை மாலை விசாகப்பட்டினம் மாவட்டம் புட்டாபந்தா கிராமத்தை சேர்ந்த மக்கள், சூனியம் வைத்ததாக கூறி 55 வயது ஆதிவாசி நபரை உயிருடன் தீ வைத்து எரித்துக்கொன்றுள்ளனர்.

இந்த சம்பவம் அறிந்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் இறந்த நபர் ஜெயராம் என அடையாளம் கண்டனர். இறந்தவரின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன் கிராமத்தில் வைரஸ் தாக்குதலால் ஒரு சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த சிறுமி பஞ்சாயத்தில், ஜெயராம் தன்னுடைய கனவில் வந்து பில்லி-சூனியம் வைத்ததாக கூறியுள்ளார்.

அடுத்த சில நாட்களில் அவர் இறந்ததால், ஆத்திரமடைந்த சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஜெயராமை அடித்து உயிருடன் தீவைத்து கொளுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்