இந்தியாவின் கேரள மாநிலத்தில் 12 வயது சிறுமி 30 ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரத்தில் 7வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவருக்கு பள்ளியின் மூலம் மனநல ஆலோசனை அளிக்கப்பட்டது.
இந்த ஆலோசனையில் அச்சிறுமி கூறிய தகவல்கள் தற்போது அந்த மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதில், குறித்த சிறுமியை அவரது 10 வயது முதல் அவரது குடும்பத்தினர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முதலாக அந்தச் சிறுமியை அவரது தந்தையின் நண்பர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதற்கு அவர் அக்குடும்பத்தினருக்கு பணம் அளித்துள்ளார்.
இதன்பின்னர் அச்சிறுமி 30 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கப்பட்டுள்ளார். இதற்கு அவரது குடும்பத்தினரின் வறுமைதான் காரணம் என அந்த சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்கிய மருத்துவர் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் தந்தைக்கு வேலை இல்லாததால் குடும்பம் பெரும் வறுமையில் இருந்தது. இதனால் அவரது தந்தை முதலில் சிறுமியின் தாயை பாலியல் தொழிக்கு தள்ள முற்பட்டுள்ளார்.
அதற்குப் பிறகு இந்தச் சிறுமியையும் அவர் பாலியல் வன்கொடுமைக்கு பயன்படுத்தியுள்ளார்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் மனநல ஆலோசகர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் அச்சிறுமியிடம் வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.
அத்துடன் அச்சிறுமியின் தந்தை உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர். கைதானதில் இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழுக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அச்சிறுமியின் தந்தை மீது சிறார் நீதி சட்டத்தின் (Juvenile Justice Act) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அச்சிறுமியை காவல்துறையினர் காப்பகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இதனிடையே அந்த சிறுமியின் அண்டை வீட்டார் ஒருவர், இந்த விவகாரம் தொடர்பாக தெரிவிக்கையில்,
தினமும் இரவு அச்சிறுமியின் அழுகை சத்தம் கேட்கும். நாங்கள் அது குடும்ப தகராறாக இருக்கும் என்று நினைத்து அதில் தலையிட்டத்தில்லை எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் சிறுமியின் பாடசாலைக்கு தகவல் அளித்துள்ளார். இதன்பிறகு தான் அச்சிறுமிக்கு மனநல ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி காப்பகத்திற்கு செல்லும் முன்னர் தனது வீட்டின் கதவில் “என்னை மன்னித்து விடுங்கள் அம்மா” என எழுதிவிட்டு சென்றுள்ளார்.
12 வயது சிறுமி ஒருவர் 30 ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கேரளா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.