இலங்கையில் என்ன நடந்ததோ... டெல்லியில் பேரணியாக சென்ற நாம் தமிழர் சீமான்

Report Print Basu in இந்தியா
186Shares

டெல்லியில் நடைபெற்ற தேசிய இன ஒற்றுமை அணிவகுப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.

ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை கண்டித்து தலைநகர் டெல்லியில் தேசிய இன ஒற்றுமை அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில், நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில் சீக்கியர் அமைப்பு நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிட்டனர். உலகம் முழுவதும் ஒடுக்கப்படுகிற அனைத்து தேசிய இன மக்களுக்காக நாங்கள் குரல் கொடுக்கிறோம்.

குரல்வளை அற்ற ஜம்மு-காஷ்மீர் மக்களுக்காக தமிழர்களாகிய நாங்கள் குரல் கொடுக்கிறோம். ஜம்மு காஷ்மீர் தலைவர்களை சிறையில் அடைத்துள்ளனர். பொதுமக்களை திறந்தவெளி சிறைச்சாலையில் அடைத்துவிட்டு ஜனநாயகம் பற்றி மத்திய அரசு பேசுவது வேடிக்கையானது.

அன்று இலங்கையில் என்ன நடந்ததோ, அது இன்று காஷ்மீரில் நடக்கிறது. எந்த ஒரு முடிவாக இருந்தாலும் காஷ்மீர் மக்களின் கருத்துகளை கேட்ட பின்புதான் செயல்படுத்த வேண்டும், என்று கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற தேசிய இனங்களின் ஒற்றுமை அணிவகுப்பு மற்றும் பேரணியின் போது ஈகைப் பேரொளி திலீபன் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்