இரு நாட்களாக டிக்டாக் தோழியுடன் ஓட்டம்பிடித்த வினிதா என்ற பெண்குறித்த செய்தி தமிழகம் முழுவதும் பெரும் பேச்சாக இருந்து வருகின்றது.
டிக்டாக் மூலம் அறிமுகமான வினிதா மற்றும் அபி நெருங்கிய தோழிகளாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில், அவர்களின் செயல் கணவருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் வினிதா மாயமானார். மனைவி மாயமானதை தொடர்ந்து வினிதாவின் கணவர் லியோ தேவகோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் வினிதா சிவகங்கை காவல் நிலையத்தில் சரணடைந்து தான் அபியுடன் ஓடவில்லை என்றும், மற்றொரு தோழி சரண்யா வீட்டிற்கு சென்றதாகவும் தெரிவித்திருந்தர்.
ஆனால் தற்போது வினிதா, தான் அபியின் ஆடல் பாடல் நிகழ்ச்சியால் ஈர்க்கப்பட்டு அவருடன் இணைந்து ஆட கணவர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டைவிட்டு ஓடிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் பதிவு செய்யும் டிக்டாக் மூலம் தனக்கு அபி அறிமுகமானார் என்றும், அவருடன் பழக்கம் வைத்திருப்பது கணவனுக்கு பிடிக்கவில்லை அதனால், 20 சவரன் நகையுடன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இச்சம்வத்தில் எதனால் அவர் வீட்டைவிட்டு வெளியேறினார் என்பது குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை