மகன் திருமணம்.... பிணையில் விடுவிக்க கோரி ராஜீவ் கொலை குற்றவாளி மனு

Report Print Arbin Arbin in இந்தியா
156Shares

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் புழல் சிறையில் உள்ள ராபர்ட் பயாஸ் தனது மகனின் திருமண ஏற்பாடுகளுக்காக தம்மை பிணையில் விடுவிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராபர்ட் பயாஸ், முருகன் உட்பட 7 பேர் 27 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு முழு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் கடந்த வருடம் தீர்ப்பு வழங்கியது.

அதன் அடிப்படையில், 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என தமிழக அரசும் ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் இதுவரை முடிவு எடுக்காததால், குறித்த பரிந்துரையானது ஆளுநர் அலுவலகத்தில் தற்போது வரை நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், நெதர்லாந்தில் வசிக்கும் 29 வயதான தன் மகன் தமிழ்கோ, திருமண ஏற்பாடுகளுக்காக 30 நாள் பிணை கேட்டு ராபர்ட் பயஸ் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

ராபர்ட் பயஸ் பரோல் மனுவை விசாரித்த நீதிபதிகள், சிறைத்துறை டிஐஜி, புழல் சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய,அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2017 ஆம் ஆண்டு ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்