ம.பி-யில் தலித் சிறுமி-சிறுவன் அடித்து கொலை: பொலிசில் குற்றவாளி அளித்த அதிர வைக்கும் வாக்குமூலம்

Report Print Basu in இந்தியா
202Shares

இந்தியாவிலன் மத்திய பிரதேச மாநிலத்தில் உறவனிர்களான தலித் சிறுமி-சிறுவன் அடித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் பிராந்தியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Shivpuri மாவட்டம் Bhawkhedi கிராமத்திலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கொல்லப்பட்ட 12 வயதான ரோஷினி மற்றும் 11 வயது அவினாஷ் இருவரும் புதன்கிழமை அதிகாலை மலம் கழிக்க சென்றுள்ளனர்.

இருவரும் Hakam Singh Yadav என்பவரின் வீட்டின் முன் சென்று இருந்துள்ளனர். இதைக்கண்டு கோபமடைந்த Hakam, கொம்பால் சிறுவர்களின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். Hakam-ன் சகோதரர் Rameshwar-ரும் சேர்ந்த தாக்கியுள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு சம்பவயிடத்திற்கு விரைந்த கிராமத்தினர், குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், இருவரும் தலை உடைந்ததால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தை அடுத்து குற்றவாளிகளான Hakam-Rameshwar இருவரையும் பொலிசார் உடனடியாக கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். Hakam மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிசார் தரப்பில் கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தனது கனவில் வந்த கடவுள் குழந்தைகளை கொல்ல உத்தரவிட்டதாகவும், தான் அதை செய்து முடித்ததாகவும் பொலிசார் நடத்திய விசாரணையில் போது Hakam கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டுள்ளார். மேலும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்