5வருடங்கள் குழந்தையில்லை.... மூன்று மாத கர்பிணியுடன் கணவன் எடுத்த சோக முடிவு

Report Print Abisha in இந்தியா
251Shares

கடன் தொல்லையால் கர்ப்பிணி மனைவியுடன் கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள செல்லாண்டி நகரைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் குமரன். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த செரினா என்பவருக்கும் 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

திருமணமமாகி 5 வருடங்களாகியும் குழந்தையில்லாமல் இருந்த தம்பதியினர், தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் காலை நீண்ட நேரமாகியும் இவர்களின் வீடு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்துள்ளனர்.

அப்போது குமரன் மற்றும் செரினா இருவரும் தூக்கில் சடலமாக தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே அவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அவர்களது வீட்டில் ஒரு கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில், ‘நான் குமரன் என் வீட்டில் உள்ள பொருள், வண்டி, டிவியை விற்று என் கடனை கட்டவும்’ என எழுதப்பட்டுள்ளதாக பொலிசார்தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

5வருடங்களித்து குழந்தை பெற இருந்த தம்பதியினர் தற்போது எடுத்துள்ள இந்த முடிவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்