பொதுகழிப்பறையில் சிறுவனுக்கு ஏற்பட்ட அவலம்.... 'படிப்பறிவு இல்ல என் பெற்றோரிடம் எப்படி சொல்வேன்' !

Report Print Abisha in இந்தியா
205Shares

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் பொதுகழிப்பறையில் சிறுவன் ஒருவனை இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பிகானர் நகரை சேர்ந்த பள்ளிச் சிறுவன் தன்னுடைய ட்விட்டரில் அதிர்ச்சிகரமான ஒரு விஷயத்தை பதிவிட்டிருந்தார். அதில்‘நான் எனது பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள பொதுக்கழிவறை ஒன்றிற்குள் சென்றேன். அங்கு இரண்டு ஆண்கள் என்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டனர்.

அந்த கழிவறைக்குள் இருந்தவர்கள் கூட வேடிக்கை பார்த்தார்களே தவிர எதுவும் கேட்கவில்லை. அங்கு நடந்தவற்றை எல்லாம் மறக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால், என் மனதில் அது வந்து வந்து செல்கிறது.

இதுதொடர்பாக எனது படிப்பறிவு இல்லாத தாய், தந்தையிடம் எப்படி கூறுவது. அதேசமயம் எனது சொந்த நகரத்தில் ஆண்களுக்கு கூட பாதுகாப்பில்லாத இடமாக மாறிவிட்டது என்பதை என்று நான் புரிந்துகொண்டேன். இந்த சம்பவத்திற்கு நான் என்ன எதிர்வினை ஆற்றுவது எனக்கூட எனக்கு தெரியவில்லை” இச்சம்வம் குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல்கள் குறித்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்