சேலத்தில் ஆட்டோ ஓட்டும் பணியில் ஈடுபட்டு வரும் மோகன்ராஜ் என்பவர், பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வீடியோக்கள் சிக்கியுள்ளன.
சேலத்தில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவந்தவர் மோகன்ராஜ். இவர் தனது ஆட்டோக்களில் பெரும்பாலம் பெண்களை மட்டும் ஏற்றி செல்லும் வழக்கத்தை கொண்டுள்ளார்.
அப்படி அவரது ஆட்டோவில் பயணிக்கும் பெண்களிடம், பேச்சு கொடுத்து தனிப்பட்ட விஷயங்கள் குறித்து கேட்டு ஆறுதல் கூறுவதுபோல் பேசி வந்துள்ளார். தொடர்ந்து பண கஷ்டம் உள்ளவர்கள் என்று கூறினால் அவர்களுக்காக பணம் வழங்குவதாக கூறி தனியாக அழைத்து பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோவாக பதிவு செய்து. அதை வைத்து மிரட்டி பெண்களிடம் உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார்.
இவருக்கு அரசியல் செல்வாக்கு அதிகம் இருந்ததால் பெண்கள் இவரை பற்றி வெளியில் சொல்ல பயந்துள்ளனர்.
இந்த நிலையில் மோகன்ராஜின் ஆட்டோவில் பயணித்த பெண் ஒருவர், மோகன்ராஜ் தன்னை பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு மீண்டும் படுக்கைக்கு அழைத்து மிரட்டி வருவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
கெத்தாக வலம் வந்த ஆட்டோ மோகன்ராஜ்-யை பிடித்து காவல்துறையினர் விசாரித்த போது அவன் ஒரு சீரியல் ரேப்பிஸ்ட் என்ற திடுக்கிடும் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.
இவனின் நடவடிக்கையால் இரு மனைவிகளும் பிரிந்து சென்றுள்ளனர்.
பொலிசாரால் கைப்பற்றப்பட்ட வீடியோக்களில் 6பேர் குடும்ப பெண்கள் என்றும், ஒருவர் கல்லூரி மாணவி என்றும் தெரியவந்துள்ளது. மேலும், ஒருபெண் இவனுக்கு பயந்து வேறு ஊருக்கே குடும்பத்துடன் சென்றுவிட்டார் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.