பள்ளி வகுப்பறையில் பெண் ஆசிரியையுடன் சில்மிஷம்... வெளியான புகைப்படத்தின் பின்னணி

Report Print Santhan in இந்தியா
1229Shares

தமிழகத்தில் பள்ளியின் வகுப்பறையில் பெண்ணுடன் நெருக்கமாக இருந்த ஆசிரியரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தேனி மாவட்டம் வாய்க்கால் பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் லீனா புஷ்பராணி என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

அதே பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் ஜான் சத்தியபாபு என்பவர் ஆசிரியராக உள்ளார். இவர்கள் இரண்டு பேருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் ஜான் சத்தியபாபு அருகில் உள்ள லீனா புஷ்பராணி பணியாற்றி வரும் அரசுப் பள்ளிக்கு அடிக்கடி சென்று வந்ததால், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

முதலில் நட்பாக இருந்த இவர்களின் பழக்கம், நாளைடைவில், நெருங்கி பழகும் அளவிற்கு வந்துள்ளது.

ஆசிரியர் லீனாவைச் சந்திக்கும் பொழுதெல்லாம் பள்ளி வகுப்பறையிலேயே இருவரும் தனிமையில் இருந்து வந்ததாகவும், அந்த நேரங்களில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஜான் சத்தியபாபு தனது செல்போனில் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் அந்த புகைப்படங்களைத் தவறுதலாக வாட்ஸப்பில் உள்ள தேனி மாவட்ட ஆசிரியர் குரூப்பில் ஜான் சத்தியபாபு பகிர்ந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற ஆசிரியர்கள் கல்வி நிர்வாகத்திடம் புகார் அளித்ததால், ஜான் சத்தியபாபுவை தனியார் பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

லீனா புஷ்பராணி அரசு பள்ளியில் ஆசிரியையாக இருப்பதால், அதற்கான விசாரணைக் குழு அமைக்கப்பட்டு குற்றம் உறுதி செய்யப்பட்ட பிறகு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மேலும் பணி நேரங்களிலேயே காலியாக உள்ள வகுப்பறைகளில் இரு ஆசிரியர்கள் தனிமையில் இருந்த வந்ததை குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்