விடுதியில் மர்மமாக இறந்து கிடந்த மாணவி: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்

Report Print Vijay Amburore in இந்தியா
574Shares

உத்திரபிரதேச மாநிலத்தில் 11ம் வகுப்பு மாணவி விடுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவத்தில், பொலிஸார் கடிதம் ஒன்றினை கைப்பற்றி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரா என்பவரின் மகள் அனுஷ்கா விடுதியில் தங்கி ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக விடுதியில் இவர் மீது திருட்டு பட்டம் சுமத்தப்பட்டதாக தெரிகிறது. இதற்காக விடுதியில் பணியாற்றிய பெண் காப்பாளர், 48 மாணவிகளை வைத்து அனுஷ்காவின் கன்னத்தில் அறைய வைத்து கொடுமைபடுத்தியுள்ளார்.

அதோடு அல்லாமல் மாணவர்கள் தினமும் அவரை கேலி செய்தும், விடுதியில் எந்த சம்பவம் நடந்தாலும் அதற்கு அனுஷ்காவையே குற்றம் சுமத்தியும் வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை 5.30 மணியளவில் அனுஷ்கா அறையில் தூக்கில் தொங்கியபடியே கிடப்பதை பார்த்த மாணவிகள் பள்ளி தலைமைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து வேகமாக மாணவியின் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதற்கிடையில் மருத்துவமனைக்கு சென்றிருந்த மாணவியின் உறவினர் ஒருவர், சடலத்தை பார்த்து பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பிறகு தான் மகள் தற்கொலை செய்துகொண்டு இறந்திருப்பது பற்றி பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. மேலும் மகளின் உடலில் ஆங்காங்கே சில காயங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த சம்பவமானது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய பள்ளி மாணவர்கள் பலரும் ட்விட்டரில், அனுஷ்கா திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் அனுஷ்காவின் தந்தை, தன்னுடைய மகள் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், நீண்ட நாட்களாகவே பள்ளியின் அதிபர் சுஷ்மா சாகர் தனது மகளை மனரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும், அதற்கு விடுதி காப்பாளர் மற்றும் அஜய் என்கிற பள்ளி மாணவர் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியின் அறையில் இருந்து கடிதம் ஒன்றினை கைப்பற்றியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்