பிறந்து 20 நாட்களேயான இரட்டையர்களை குளத்தில் வீசி கொன்ற இளம் தாயார்: அவர் சொன்ன அதிர்ச்சி காரணம்

Report Print Arbin Arbin in இந்தியா
485Shares

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து மனமுடைந்த இளம் தாயார் இரட்டை பிள்ளைகளை அருகாமையில் உள்ள குளத்தில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் முசாஃபர் நகர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

பிறந்து வெறும் 20 நாட்களேயான பெண் பிள்ளைகளே கொல்லப்பட்டனர். நஸ்மா என்ற இளம் தாயாரே கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து தமது பிள்ளைகளை கொன்றவர்.

கணவர் வசீமுக்கு நிரந்தரமான வேலை இல்லை என்பதாலும், இந்த விவகாரம் தொடர்பில் இருவரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டும் வந்துள்ளனர்.

தற்போது பிள்ளைகள் வேறு பிறந்துள்ளதால் போதிய வருவாய் இன்றி வாழ்க்கையை முன்னெடுத்துச் செலவது கடினம் என நஸ்மா வாதிட்டுள்ளார்.

ஆனால் கணவரிடம் இருந்து பொருத்தமான பதில் கிடைக்காததை அடுத்து, ஆத்திரத்தில் பிள்ளைகளை இருவரையும் அள்ளி எடுத்து, அருகாமையில் உள்ள குளத்தில் வீசியுள்ளார் நஸ்மா.

பின்னர் அப்பகுதி மக்களிடம் தமது பிள்ளைகளை எவரோ திருடிவிட்டு சென்றதாக நாடமாடியுள்ளார்.

தொடர்ந்து கணவருடன் இணைந்து இருவரும் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் பொலிசார் தீவிரமாக இவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், நஸ்மா குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, குளத்தில் இருந்து சகதியில் மூடிய நிலையில் இரு பிள்ளைகளின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்