நடுரோட்டில் கணவனின் உயிரை பறித்த கோவில் பிரசாதம்: கவலைக்கிடமான நிலையில் மனைவி!

Report Print Vijay Amburore in இந்தியா
386Shares

சென்னையில் கோவில் பிரசாதத்தை சாப்பிட்ட பேராசியர் நடுரோட்டில் மயங்கி விழுந்து இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்த கார்த்திக் (34) என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட ஆட்குறைப்பு நடவடிக்கையில் தன்னுடைய வேலையை இழந்தார்.

இதனையடுத்து அரசு கல்லூரியில் வேலையில் சேர்வதற்காக வேலாயுதம் (42) என்பவரிடம் ரூ.3 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் இரண்டு ஆண்டுகளை கடந்தும் கூட வேலாயுதம் அரசு வேலை எதுவும் வாங்கி தராமல் இழுத்தடித்ததோடு, பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார்.

நேற்று அந்த நபர், ‘அரசு வேலைக்கான பணி நியமன ஆணை’ வந்துள்ளதாக கூறியுள்ளார். உடனே கார்த்திக் தன்னுடைய மனைவி சரண்யா(29) உடன் சென்றுள்ளார். அங்கு வேலாயுதம் கோவில் பிரசாதம் எனக்கூறி ஒன்றினை கொடுத்துள்ளார்.

அதனை சாப்பிட்டுவிட்டு தம்பதியினர் இருவரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென கார்த்திக் நடுரோட்டில் மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள், கார்த்திக் மற்றும் அவருடைய மனைவி சரண்யா ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் சரண்யா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த பொலிஸார், சரண்யாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் வேலாயுதம் கொடுத்த பிரசாதத்தில் விஷம் கலந்திருந்ததாக குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், வேலாயுதம் கொடுத்த பிரசாதத்தில் உண்மையாகவே விஷம் கலந்திருந்ததா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்