அம்மா கொடுத்த காபியை நம்பி குடித்த ஒன்றும் அறியாத குழந்தைகள்.. கண்ணீரில் ஆழ்த்திய சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா
1217Shares

இந்தியாவில் நான்கு குழந்தைகளுக்கு காபியில் விஷம் கலந்து கொடுத்து விட்டு தானும் விஷத்தை அருந்தி தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் குர்னூலை சேர்ந்தவர் வரலட்சுமி. இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த வரலட்சுமி காபியில் விஷத்தை கலந்து தான் குடித்ததோடு நான்கு குழந்தைகளுக்கும் கொடுத்தார்.

ஒன்றும் அறியாத குழந்தைகளும் தாய் தானே காபி கொடுக்கிறார் என ஆசையோடு குடித்தனர்.

பின்னர் ஐந்து பேரும் மயங்கி விழுந்தனர். இதையடுத்து குடும்பத்தார் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி வரலட்சுமி உயிரிழந்தார், அவரின் நான்கு குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்