தாலி கட்டி முடித்ததும் தம்பதியர் செய்த செயல்.. ஆச்சர்யத்தில் ஆழ்ந்த பொதுமக்கள்!

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் திருமணம் முடித்த மணமக்கள் புத்தர், அம்பேத்கரின் படங்களுக்கு மாலை அணிவித்தது பொதுமக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். புத்த மதத்தின் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட இவர், யாரும் எதிர்பார்க்காத வகையில் தன்னுடைய திருமணத்தை நடத்தியிருக்கிறார்.

அதாவது, துறவிகளை வரவழைத்து அவர்கள் கூறிய உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு, மணமக்கள் தங்களை புத்த மதத்தில் இணைத்துக் கொண்டு குத்துவிளக்கேற்றினர். முன்னதாக, பெற்றோரிடம் ஆசீர்வாதம் பெற்ற பரமசிவம், மணமகளின் கழுத்தில் மஞ்சள் கயிற்றை அணிவித்து சம்பிரதாயத்தை முடித்தார்.

பின்னர் புத்தர், அம்பேத்கரின் படங்களுக்கு மணமக்கள் மாலை அணிவித்தனர். இந்த திருமண விழாவில் நெல், பழ வகைகள் இடம்பெற்றன. குடத்தில் தண்ணீரும், தண்ணீரில் இருந்து நூல் இணைக்கப்பட்டு புத்தரின் படத்துக்கு மேலே வைக்கப்பட்ட அரசமர, இலைகளுக்குள் இணைக்கப்பட்டிருந்தது.

தாலி கட்டிய பின் மேடையை விட்டு இறங்கிய மணமக்கள், உறவினர்களின் இருக்கைக்கு நேரில் சென்று வாழ்த்து பெற்றனர். இந்த திருமணத்தில் கலந்துகொண்ட அனைவரும், முதன் முறையாக புத்தமத திருமணைத்தைக் கண்டு ஆச்சர்யமாகப் பார்த்தனர்.

இந்நிலையில், மணமகன் பரமசிவம் திருமணம் குறித்து கூறுகையில், ‘நான் ஏற்றுக் கொண்ட புத்தமத வழக்கப்படி மதத் துறவிகளை வைத்து திருமணம் செய்துகொண்டேன். இரு வீட்டார் சம்மதத்தோடு தான் திருமணத்தை நடத்தினோம்’ என தெரிவித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்