வியக்கவைக்கும் தமிழர்களின் வரலாறு... கி.மு 6ம் நூற்றாண்டிலேயே கல்வியறிவு: கீழடி அகழாய்வு அறிக்கை!

Report Print Vijay Amburore in இந்தியா

தமிழக அரசு நடத்திய கீழடி நான்காம் கட்ட ஆய்வறிக்கையில் கி.மு 6ம் நூற்றாண்டிலே அங்கு வாழ்ந்த தமிழக மக்கள் கல்வியறிவு பெற்றிந்ததாக தெரியவந்துள்ளது.

வைகை நதியின் தென்கரையில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடியில் 40-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெற்று வருகிறது.

2018ம் ஆண்டில் கீழடியில் தமிழக அரசால் நடத்தப்பட்ட 4வது அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை வைத்து, தமிழக தொல்லியல் துறையால் இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சிந்து, கங்கை நதிக்கரை நாகரிகத்திற்கு பின், இரண்டாம் நிலை நகர நாகரிகங்கள், தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய், சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு, கலையறிவு, பெருநகர வாழ்வு என வைகை கரை நாகரிகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.

இதன்மூலம் கீழடியில் வாழ்ந்த தமிழர்களின் நாகரீகம் 2600 ஆண்டுகள் பழமையானது என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வானது இந்திய வரலாற்றையே மாற்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட காளையின் திமில், எழுத்துக் கீறல்கள் கொண்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், கி.மு 6-ம் நூற்றாண்டில் தமிழர்களிடையே எழுதும் பழக்கம் இருந்துள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது!

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்