மாப்பிள்ளையை நடுரோட்டில் தாக்கி... மணப்பெண்ணுடன் ஓட்டம் பிடித்த இளைஞர்... அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் மாப்பிள்ளையை தாக்கிவிட்டு நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த பெண்ணை மாற்று சமூகத்தை சேர்ந்த காதலன் இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதாச்சலத்தில் உள்ள மணக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் இளம்பாரதி. இவர் திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் வித்யா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.

இந்நிலையில் வித்யாவுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்த நிலையில் நிச்சயதார்த்தம் விரைவில் நடக்கவிருந்தது.

விருதாச்சலம்

அதற்காக வித்யாவையும், மாப்பிள்ளையையும் அழைத்து கொண்டு, உளுந்தூர்பேட்டையில் இறங்கி விருத்தாசலம் வருவதற்காக குடும்பத்தினர் காத்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த இளம் பாரதி, மாப்பிள்ளையை தாக்கிவிட்டு, வித்யாவை இழுத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த நிலையில் அதை பொலிசார் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.

சாலைமறியல்

இதனால் கோபமடைந்த உறவினர்கள் உள்ளிட்ட அதிகளவிலான மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மேலும் ஒருதலைபட்சமாக செயல்படும் காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்ணை மீட்டு தர கோரியும் முழக்கமிட்டனர்.

தகலறிந்து வந்த பொலிசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, பெண்ணை மீட்டுத் தருவதாக உறுதி அளித்ததால் சாலை மறியல் கைவிடப்பட்டது.

ஆனாலும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் குவிந்து வருவதால் அங்க பெரும் பதட்டம் நிலவி வருகிறது.

வித்யா

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்