பெண் சடலத்துடன் உயிரோடு எரித்து சாம்பலாக்கப்பட்ட இளைஞர்: சந்தேகத்தால் நேர்ந்த விபரீதம்

Report Print Basu in இந்தியா

இந்தியாவில் பெண் சடலத்துடன் இளைஞர் ஒருவர் உயிரோடு எரித்து சாம்பலாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தின் புறநகரில் உள்ள Shamirpet பகுதியிலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கொல்லப்பட்ட நபர் 24 வயதான ஆட்டோ ஓட்டுநர் Anjaneyulu என தெரியவந்துள்ளது.

உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, Anjaneyulu மற்றும் அவரது தந்தை சூனியம் செய்வதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில், Anjaneyulu மற்றும் லட்சுமி ஆகியோர் அக்கம் பக்கத்தினர், கடந்த ஐந்து ஆண்டுகளாக லட்சுமி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உஸ்மானியா பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவித்துள்ளனர்.

Anjaneyulu-வும் அவரது தந்தையும் செய்த சூனியமே லட்சுமியின் மோசமான உடல்நலத்திற்கு காரணம் என குடும்பத்தினர் சந்தேகித்துள்ளனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை லட்சுமி இறந்துள்ளார், அதைத் தொடர்ந்து புதன்கிழமை அவரது இறுதி சடங்குகள் நடத்தப்பட்டுள்ளன.

லஞ்சுமியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள Anjaneyulu வந்ததாக கூறப்படுகிறது. அவரை கண்டு ஆத்திரமடைந்த லட்சுமியின் மைத்துனர் பால்ராம் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் Anjaneyulu-ஐ கோடாரிகளாலும், அரிவாளாலும் தாக்கியதாகக் கூறப்படுகிறது, மேலும், அவரை எரிந்துக்கொண்டிருந்த லட்சுமியின் சடலத்துடன் வீசியுள்ளனர்.

அன்று இரவு இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் அவர்கள் விசாரணையைத் தொடங்கினர் மற்றும் குற்றம் நடந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அதேசமயம், Anjaneyulu-வின் சகோதரரும் தனது சகோதரரைக் காணவில்லை என்று கூறி Shamirpet காவல் நிலையத்தை அணுகியுள்ளார்.

thenewsminute

வியாழக்கிழமை காலை, மோப்ப நாய்களுடன் பொலிஸ் குழு மயானத்தை சோதனை செய்துள்ளனர். அப்போது, ரத்தக் கறை படிந்த இடத்தைக் கண்டுபிடித்துள்ளனர், மேலும் சம்பவ இடத்திலிருந்து ஒரு கைக்குட்டையை மீட்டுள்ளனர்.

மேலும், சாம்பலில் இருந்த எலும்புகளையும் சேகரித்த பொலிசார், அதை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். மேலதிக விசாரணைக்கு தலைமறைவாக இருக்கும் பால்ராமை கைது செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்