17 வயதில் திருமணம்... 18 வயதில் முதல் குழந்தை! 19 வயதில் கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு

Report Print Vijay Amburore in இந்தியா

வேலூர் மாவட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணாமாக மூன்று மாத கர்ப்பிணி பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்த செல்வம் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனலட்சுமி என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், தனலட்சுமி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவும் மனைவியுடன் சண்டையிட்டுவிட்டு, அதிகாலை எழுந்து செல்வம் வேலைக்கு சென்றுவிட்டார்.

இதனால் மனஉளைச்சலில் இருந்த தனலட்சுமி, கணவன் சென்றதும் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதிகாலை நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், கதவை திறந்த போது, தனலட்சுமி சடலமாக தொங்கியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், தனலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், கொலையா? தற்கொலையா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு வயது குழந்தையை தவிக்கவிட்டு, நான்கு மாத கர்ப்பிணி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்