முதல் மனைவியுடன் வாழும் போதே கல்லூரி மாணவியை மயங்கி மணந்த 44 வயது நபர்... வெளியான பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் முதல் மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே கல்லூரி மாணவியை இரண்டாவது திருமணம் செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூரின் புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவமணி (44). பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவருக்கு திருமணமாகி 10 வயதில் மகன் உள்ளான்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 19 வயதுடைய கல்லூரி மாணவி சினேகாவுடன் சிவமணிக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு சினேகா காணாமல் போனதாக அவர் தந்தை கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சிவமணி சினேகாவைத் திருமணம் செய்து கொண்டு வேளாங்கண்ணியில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிவமணியை கைது செய்து அழைத்து வந்த பொலிசார் அவரிடமும், சினேகாவிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்