முதுகு வலி பொறுக்க முடியாமல் கதறிய தமிழக இளைஞர்.. எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் இளைஞரின் முதுகில் கத்தித் துண்டை வைத்து மருத்துவர்கள் தையல் போட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாரதி. இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜானகிராமனுக்கும் முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில் கடந்த 14ஆம் திகதி இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் பாரதியை, ஜானகிராமன் முதுகில் கத்தியால் குத்தினார்.

இதையடுத்து கடலூர் மருத்துவமனைக்கு வந்த பாரதிக்கு கத்திக்குத்து பட்ட இடத்தில் தையல் போடப்பட்டது.

ஆனால், அதன் பின்பு வலி பொறுக்க முடியாமல் கதறிய நிலையில், பாரதியின் முதுகுப் பகுதியை மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துள்ளனர். அப்போது, கத்தியின் உடைந்த பகுதி முதுகுப் பகுதியில் இருப்பது தெரியவந்தையடுத்து அதிர்ச்சியடைந்தனர்.

இதைப் பார்த்து இளைஞரும் உறவினர்களும் பதறியுள்ளனர். இதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் பாரதி.

அங்கு இரண்டு நாள்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் முதுகில் இருந்த உடைந்த கத்தித் துண்டு அகற்றப்பட்டது.

ஆனால், கவனக்குறைவாக இருந்த அரசு மருத்துவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்