பிரபல நடிகரின் வீட்டில் அழுகி கிடந்த உடல்... பொலிசார் தீவிர விசாரணை

Report Print Basu in இந்தியா

தெலுங்கானாவில் உள்ள பிரபல நடிகர் நாகர்ஜுனாவின் பண்ணை வீட்டில் அழுகிய நிலையில் உடல் ஒன்ற கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rangareddy மாவட்டத்தின் Papireddyguda பகுதியில் உள்ள நாகர்ஜுனாவின் பண்ணை வீட்டில் இருந்தே உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து Keshampet பொலிசார் வெளியிட்ட அறிக்கையில், அப்பகுதியில் இருந்த 40 ஏக்கர் விவசாய நிலத்தை சமீபத்தில் நடிகர் நாகர்ஜுனா வாங்கியுள்ளார். பல ஆண்டுகளாக நிலம் பயன்படுத்த படாமல் இருந்துள்ளது.

இந்நிலையில், நிலத்தை இயற்கை விவசாயத்திற்காக தயார் படுத்தும் பணிக்கு சில விவசாயிகளை நாகர்ஜுனா அனுப்பியுள்ளார். அங்கு சென்ற விவசாயிகள் பல நாட்கள் பயன்படுத்தாமல் இருந்த வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வருவதை உணர்ந்துள்ளனர்.

இதனையடுத்து சென்ற பார்த்த போது அழுகிய நிலையில் உடல் பாகங்கள் இருப்பதை கண்டுள்ளனர், உடனே கிராம வருவாய் அலுவலருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

கிராம அலுவலர் கொடுத்த தகவலை அடுத்து சம்பவயிடத்திற்கு மோப்ப நாய் படையுடன் வந்த பொலிசார், தடயவியல் ஆதாரங்களை சேகரித்து, வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினார்.

இன்னும் உடல் அடையாளம் காணப்படாத நிலையில், நபர் ஆறு மாதங்களுக்கு முன் இறந்திருக்கலாம் என கூறும் பொலிசார், இது தற்கொலையாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.

மேலும், இறந்தவரை அடையாளம் காண, காணாமல் போனவர்களின் பட்டியலைக் கொண்டு ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்