திருமணமான 7 நாட்களில் கணவனுடன் சென்ற இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம்!

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடிக்காத காரணத்தினால், திருமணமான 7 நாட்களில் புதுமண ஜோடி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரியைச் சேர்ந்த இன்ஜினியரான பாலமுருகனுக்கும் செம்படாக்குறிச்சியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த 7 தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், கடந்த புதன் கிழமை மாலை பாலமுருகன், பிரியதர்ஷினி மற்றும் அவரது தம்பி மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்றனர்.

அப்போது மூவருமே தலைக்கவசம் அணியாமல் சென்ற நிலையில், கள்ளக்குறிச்சி அம்மன்நகர் அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது இவர்களது வாகனம் மோதியதால், பிரியதர்ஷினி சாலை நடுவேயும் பாலமுருகனும் சந்தோஷும் சாலையோரமும் விழுந்தனர்.

இதில், சாலை நடுவே விழுந்த பிரியதர்ஷினி மீது அவ்வழியாக வந்த லாரி ஏறியதில் அவர் சம்பவ இடத்திலே உடல்நசுங்கி உயிரிழந்தார்.

பாலமுருகன், சந்தோஷ் மற்றும் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நாராயணன் என்பவரும் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து உடனே பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்