பேனர் விபத்தில் சுபஸ்ரீ பலியான சிசிடிவி காட்சி வெளியானது

Report Print Basu in இந்தியா

சென்னை பள்ளிக்கரணையில் நடைபெற்ற பேனர் விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

23 வயதான சுபஸ்ரீ நேற்று கனடா செல்வதற்கான தேர்வு எழுதி முடித்துவிட்டு பைக்கில் வீடு திருப்பிக்கொண்டிருந்து போது சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்தில் நிலைதடுமாறி கீழே சரிந்துள்ளார் சுபஸ்ரீ. .

இதன் போது அவர் பின்னால் வந்த லொறி ஏறி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக, அப்பகுதியை சேர்ந்த அதிகாரிகளை அழைத்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.

இச்சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சுபஸ்ரீ விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

அதில், சாலை ஓரத்தில் பேனர் அந்தரத்தில் ஆட, சுபஸ்ரீ பைக்கில் வர திடீரென பேனர் அவர் மீது விழுகிறது. இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழ பின்னால் வந்த டேங்க் லொறி அவர் மீது ஏறி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்