மனைவியை விட்டு ஒரு நாளும் பிரிந்தது இல்லை.. திடீரென நடந்த ஒரு துயரம்... கண்ணீர் வரவழைக்கும் புகைப்படங்கள்

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் உயிரிழந்த மனைவிக்கு கோவில் கட்டி தினமும் வழிபாடு செய்து வரும் கணவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரத்தை அடுத்த எருமையூரை பூர்வீகமாக கொண்டவர் ரவி. இவர் சென்னை மாநகராட்சியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி ரேணுகா, இவர்களுக்கு திருமணம் ஆகி 32 ஆண்டுகள் ஆகின்றன.

இவர்களுக்கு விஜய், சதீஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2006ம் ஆண்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ரேணுகா உயிரிழந்துள்ளார்.

மனைவியை விட்டு ஒரு நாளும் பிரியாத ரவியால் அவரின் இறப்பை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியவில்லை.

இது குறித்து ரவி கூறுகையில், ரேணுகா இறந்த போதே நானும் இறந்திருப்பேன். ஆனால் என் இரண்டு மகன்களின் நலன் கருதி நான் வாழ்ந்து வருகிறேன்

மனைவி உயிருடன் இருக்கும் போது அவர் ஆசைப்பட்டு கேட்ட சொந்த வீடு கனவு முடியாமல் போனது. ஆனால் இப்போது மனைவிக்காக 9க்கு 9 அடி நீளம் அகலத்தில் 16 அடி உயரத்தில் கோயில் கட்டியுள்ளேன்.

அதில் பளிங்கு கல்லில் ரேணுகாவின் உருவத்தை செய்து நானும் என் பிள்ளைகளும் வழிபட்டு வருகிறோம்.

அந்தக் கோயிலுக்கு ரேணுகா அம்மான் திருக்கோயில் என பெயர் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்