வெளிநாட்டுக்கு செல்லவேண்டும் என்ற சுபஸ்ரீ கனவு நிறைவேறவேயில்லை... ஒரே மகளை பறிகொடுத்த தந்தை கண்ணீர்

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் அந்நியாயமாக இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த நிலையில் அது குறித்து அவர் தந்தை கண்ணீருடன் பேசியுள்ளார்.

கனடாவுக்கு செல்வதற்காக தேர்வை எழுதிவிட்டு பள்ளிக்கரணை பகுதியில் நேற்று இருசக்கர வாகனத்தில் தனியாக வந்து கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற பெண் மீது சாலையில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி பதாகை சரிந்து விழுந்தது.

இதையடுத்து நிலைதடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது லொறி ஏறி இறங்கியதில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இதையடுத்து தங்களின் ஒரே மகளை பறிகொடுத்து விட்டு சுபஸ்ரீயின் பெற்றோர் கதறி துடித்து வருகின்றனர்.

இது குறித்து கண்ணீருடன் பேசிய சுபஸ்ரீயின் தந்தை ரவி, பி.டெக் படித்து முடித்துள்ள என் மகள் வெளிநாட்டுக்கு வேலைக்கு போக வேண்டும் என ஆசையாக இருந்தாள்.

ஆனால் பதாகைகள் வைக்கும் கலாசாரத்தால் என் ஒரே மகள் எமனுக்கு பலியாகிவிட்டாள், இதனால் அவர் கனவு நிறைவேறாமலேயே போய்விட்டது.

இது போன்ற சம்பவம் இனி யாருக்கும் நடக்கக்கூடாது. பதாகை கலாச்சாரத்தால் உயிரிழந்தது என் மகளே கடைசியாக இருக்கட்டும்.

இதை தடுக்க பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்